அமித்ஷாவிடம் பேசியது என்ன? அண்ணாமலை சொன்ன தகவல்

அமித்ஷாவிடம் பேசியது என்ன? அண்ணாமலை சொன்ன தகவல்
அமித்ஷாவிடம் பேசியது என்ன? அண்ணாமலை சொன்ன தகவல்

தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்குத் தயாராக வேண்டும்

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் 2 மணி நேரம் பேசினேன். அந்த வகையில், தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்குத் தயாராக வேண்டும். அதுவே எங்கள் இலக்கு. இதைத்தான்  அமித்ஷாவிடம் பேசினேன் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், பா.ஜ.க - அ.தி.மு.க. கூட்டணி என்பது இறுதியானது அல்லது உறுதியானது என்று இப்போது எதுவுமே கூறமுடியாது.

தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளது. அப்படி இருக்கையில், இப்போது தேர்தல் கூட்டணி குறித்தோ அல்லது போட்டியிடப்போகும் தொகுதிகள் குறித்து இறுதியான முடிவு எதுவும் எடுக்கமுடியாது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அமித்ஷாவிடம் 2 மணி நேரம் பேசினேன். அந்த வகையில், நாங்கள் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்குத் தயாராக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அதைநோக்கி சென்றுகொண்டுள்ளோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தூய்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என பா.ஜ.க. நினைக்கிறது. அதில் சிறிது பின்னடைவு இருந்தாலும் கவலையில்லை. இன்று நாம் செல்லும் அரசியல்பாதை 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சரிவராது. மேலும், தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெறுவதால் எந்தப் பயனும் இல்லை என்பது எனது கருத்து. நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் தூய்மையான அரசியலை கொண்டுவருவேன்.முன்னெடுப்பேன்.

திட்டமிட்டபடி வரும் 14-ம் தேதி தி.மு.கவினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றவர், சென்னையில், நான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அவருடன் அரசியல் குறித்து ஏதும் பேசவில்லை' என்று விளக்கம் அளித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com