'பாகுபலி' கெட்டப்பில் எடப்பாடி பழனிசாமி - அ.தி.மு.க தொண்டர்கள் பேனர் வைரல்

'பாகுபலி' கெட்டப்பில் எடப்பாடி பழனிசாமி - அ.தி.மு.க தொண்டர்கள் பேனர் வைரல்
'பாகுபலி' கெட்டப்பில் எடப்பாடி பழனிசாமி  - அ.தி.மு.க தொண்டர்கள் பேனர் வைரல்

அதிமுக தொண்டர்கள் வைத்த 'கட் அவுட்' சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் 'எடப்பாடி பழனிச்சாமிக்கு பாகுபலி வேடத்தில் அ.தி.மு.க-வினர் வைத்த கட் அவுட்' சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அ.தி.மு.க-வின் பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளிவந்தது.தீர்ப்பில் அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடருவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.இதனால் உற்சாகம் அடைந்த அ.தி.மு.க தொண்டர்கள் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர்.அதில்  'தமிழக மக்களின் பாகுபலியே கழகப் பொதுச் செயலாளரே' தங்களை வாழ்த்தி வணங்குகிறோம்' என்ற வாசகங்களுடன் பாகுபலி வேடத்தில் கையில் வாளுடனும் நிற்பதைப் போன்று வடிவமைத்து பேனர் வைத்துள்ளனர். பேனரில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் ஆகியோர் படங்களும் இடம் பெற்றுள்ளது.இந்த பேனர் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com