'ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க-வில் இடமிருக்கிறதா?' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

'ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க-வில் இடமிருக்கிறதா?' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
'ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க-வில் இடமிருக்கிறதா?' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்ந்து அங்கம் வகிக்கிறது.

அதிமுக ஜூலை 11ல் பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடைவிதிக்க கோரிய ஓ.பி.எஸ். அணியினரின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு இன்று நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கோரும் மேல்முறையீடு மனுவை ஓபிஎஸ் தரப்பு தொடுத்தது. அதை அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ஜெயக்குமார், “உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதிமுக என்கிற கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ், அவருக்கு ஒருபோதும் கட்சியில் இடமில்லை. உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சிகரமானது, வரவேற்கதக்கது. தீர்ப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் கொண்டாடுகின்றனர். பாஜக, அமமுக-வை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவது ஒரு போதும் நடக்காது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்ந்து அங்கம் வகிக்கிறது” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com