தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சிறப்பாக அரசியல் செய்து வருகிறார்
பா.ஜ.க ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க செயல்பட முடியாது என்று தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, ' தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சிறப்பாக அரசியல் செய்து வருகிறார். அவரது அரசியல்தான் தமிழகத்திற்கு சரிப்பட்டு வரும். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறியது பா.ஜ.கவுக்கு வலுசேர்க்கும் நடவடிக்கையாவே நான் பார்க்கிறேன்.
இதுபோல, அண்ணாமலை பேசினால்தான் அ.தி.மு.க-வினர் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முன்வருவார்கள். ஏன் என்றால் பா.ஜ.க தயவு இல்லாமல் அ.தி.மு.க-வால் செயல்பட முடியாது' என்று தெரிவித்தார்.
ஏற்கனவே, தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. சி.டி.ரவியின் கருத்தால் அ.தி.மு.க தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.