கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை முடிவு

கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை முடிவு
கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை முடிவு

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம்

கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப்பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் ரூ200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் 9.6 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா 1.0 திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து ஏப்ரல் 2018-இல், கூடுதலாக ஏழு பிரிவுகளைச் (பட்டியலின/பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீவுகள்) சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டத்தில் பலன்கள் நீட்டிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com