'அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது' - நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு

'அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது' - நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு
'அ.தி.மு.க  பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது' - நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு

எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்து தீர்ப்பை ஒத்திவைத்தார்.

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த வழக்குகளில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விடுமுறை நாளான புதன்கிழமை முழுவதும் விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்து தீர்ப்பை ஒத்திவைத்தார். 
இந்நிலையில், ஓ.பி.எஸ்., மற்றும் அவரது அணியினரின் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் இன்று  தாக்கல் செய்யப்பட்டன. கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாதங்களை தொகுத்து எழுத்துப்பூர்வ வாதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து நிலுவையில் இருக்கும் வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிப்பது அதற்கு  முரணானது என எழுத்துப்பூர்வ வாதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com