ஜூன் மாதமே கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கின்றனர்.
அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக நிர்வாகியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் கைது செய்யப்பட்டார்.
அதிக வட்டி தருவதாக கூறி 4 பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்திருக்கின்றன. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வட்டியாக தருவதாகக் கூறி, ஆசை வார்த்தை காட்டி பொதுமக்களிடம் இருந்து ரூ.2,438 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு பெற்று மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகிக்கு முக்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக ஹரிஷ் என்பவருக்கு இதில் தொடர்பிருப்பதாக போலீசார் கண்டறிந்தனர். ஹரிஷ் தரகராக செயல்பட்டு பல கோடி ரூபாய் அளவிற்கு பொதுமக்களிடம் வசூல் செய்து மோசடி செய்தது தெரியவந்தது.
மோசடியில் சிக்கியுள்ள ஹரிஷை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். பா.ஜ.க.,வின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷை பொருளதாரக் குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர். இந்த நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குநரான மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து பா.ஜ.க., தரப்பினர் கூறும் போது, ’’ஆண்டு ஜூன் மாதமே கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டனர்’’ எனத் தெரிவிக்கின்றனர்.