'கூண்டைவிட்டு வெளியே வர கிளி தயாராகிவிட்டது' - கோவில்பட்டியில் அண்ணாமலை பேச்சு

'கூண்டைவிட்டு வெளியே வர கிளி தயாராகிவிட்டது' - கோவில்பட்டியில் அண்ணாமலை பேச்சு
'கூண்டைவிட்டு வெளியே வர கிளி தயாராகிவிட்டது' - கோவில்பட்டியில் அண்ணாமலை பேச்சு

பாலும், தண்ணியும் சேராது, நம்மடைய பாதை தனிப்பாதை, சிங்கப்பாதை

தமிழகத்தில் பாஜகவிற்கு நேரம் வந்துவிட்டது என தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, ‘’இத்தனை ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி, தற்போது கூண்டை விட்டு வெளியே வரத் தயாராகி விட்டது. கிளி பறப்பதற்கு சக்தி தயாராக உள்ளது. பறக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது. பா.ஜ.க.,வால் பறக்க முடியும், பா.ஜ.க.,, ஆட்சி அமையும் என்கிற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது.  பா.ஜ.க.,வினர் கூனிக் குறுகி வாக்குக் கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை. பா.ஜ.க.,வினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்களர்களிடம் வாக்கு கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸைவிட பா.ஜ.க., 45 சதவிகிதம் அதிகமாகவே செய்துள்ளது. பாலும், தண்ணியும் சேராது, நம்மடைய பாதை தனிப்பாதை, சிங்கப்பாதை’’எனத் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் எம்.பி., பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது; ராகுல்காந்தியின் தண்டனை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது; தண்டனை பெற்ற ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; ராகுல்காந்தி அப்பீல் சென்று நிரூபிக்கட்டும்’’ எனக் கூறினார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com