'தி.மு.க-வுக்கு சாதகமான சூழல் ஏற்படாது' - திருவாரூரில் சசிகலா பேட்டி
"அனைவரையும் ஒன்று சேர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம்" எங்களுடைய கட்சிக்காரர்களுக்கு இடையே வித்தியாசம் பார்ப்பதில்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் அதிமுக நகரச் செயலாளர் மூர்த்தி மகளுக்கும் சசிகலாவின் உறவினரான சிவகுமார் என்பவரின் மகனுக்கும் திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சசிகலா...
சட்டசபையில் ஓ பன்னீர்செல்வம் பேசும்பொழுது அதிமுக எனக் கூறினார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக என்று எப்படி அவர் கூறலாம் நாங்கள் ஒருவர்தான் அதிமுக எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இந்த மோதல் தொடர்ந்தால் "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவிற்குச் சாதகமான சூழல் நிச்சயம் ஏற்படாது" அப்படி ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன்.நிச்சயமாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம்.
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் 'அதிமுக பிரிந்து இருப்பது தான்' காரணம் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்குத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.'ஓ.பன்னீர்செல்வம் தன்னை வந்து சந்திப்பதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது.எங்களுடைய கட்சிக்காரர்களுக்கு இடையே வித்தியாசம் பார்ப்பதில்லை என்றார்.