இந்நிலையில் பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிரதமர் மோடி பிறப்பித்தார். அதன்படி, ‘’இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை முறையாக செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிதல், கண்காணித்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் எனும் வகையில் டெஸ்ட், ட்ராக், ட்ரீட், தடுப்பூசி செலுத்துதல் உள்பட 5 வகையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ்களின் மரபணு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய மாதிரி சிகிச்சை முறை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். மக்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வழங்க வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.