லண்டன் சம்பவத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா - என்ன நடந்தது?

லண்டன் சம்பவத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா - என்ன நடந்தது?
லண்டன் சம்பவத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா - என்ன நடந்தது?

இந்திய தூதரகத்திற்கு வெளியே லண்டன் பெருநகர போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

லண்டன் நகரில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய தூதரகத்தை இங்கிலாந்து அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லை. அதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை விலக்கியது மத்திய அரசு.
வெளிநாடுகளில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் உள்ள  இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.  
இந்நிலையில், இந்து கோவில்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிராக வாசகங்களையும் எழுதி வைத்தனர். இந்துக்கள் மீதான இந்த வெறுப்புச் செயல்களுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசு, ’’கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதவழிபாட்டு கட்டிடங்கள் மீது நடத்தப்படும் எந்தவித தாக்குதல்களையும் அரசு சகித்து கொள்ளாது’’ எனத் தெரிவித்தார்.
 இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் இருக்கும் இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் ஒன்று கூடினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அப்போது அங்கு இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். இதனை தொடர்ந்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே லண்டன் பெருநகர போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். 
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, மீண்டும் போராட்டம் நடத்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகம் மற்றும் தூதரக ஆணையர் இல்லத்தின் அனைத்து வெளிப்புற பாதுகாப்பையும் நீக்கி இந்திய அரசு அதிரடி காட்டியது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com