'ஓ.பி.எஸ், தனிக்கட்சி நடத்துகிறார், அவர் அ.தி.மு.க அல்ல' -நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் என்ன?

'ஓ.பி.எஸ், தனிக்கட்சி நடத்துகிறார், அவர் அ.தி.மு.க அல்ல' -நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் என்ன?
'ஓ.பி.எஸ், தனிக்கட்சி நடத்துகிறார், அவர் அ.தி.மு.க அல்ல' -நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் என்ன?

அதிமுக கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 4 வழக்குகளும் பொறுப்பு தலைமை நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜபாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது. 
’’1972ம் ஆண்டு துவங்கப்பட்ட அதிமுகவில் 1977 முதல் உறுப்பினராக பன்னீர் செல்வம் இருந்துள்ளார். பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட விதியின் படி 2017 முதல் டிசம்பர் 2026 வரை ஒருங்கணைப்பாளராக தொடர அதிகாரம் உள்ளது. அடிப்படை உறுப்பினர்கள் தலைமை பொறுப்புக்கு வருவதை தடுக்கும் வகையில் முதன்மை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என விதியில் திருத்தம் உள்ளது.  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதித்தது. வங்கி கணக்குகள், உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது என அனைத்திலும் முடிவெடுக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்க செயற்குழு அனுமதி அளித்துள்ளது’’ என ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
கட்சி விதிகளின் படி செயற்குழுவுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். 
அதற்கு ஓ.பி.எஸ் தரப்பில், ’’பொதுக்குழுவுக்கு அதிகாரமா? தலைமை கழகத்துக்கு அதிகாரமா? யார் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளது என விளக்கவில்லை. திமுகவுடன் இணைந்தும், திமுகவின் செயலை பாராட்டும் விதமாக செயல்பட்டதாலும், தனது சொந்த லாபத்திற்காக பல கோடிகள் செலவு செய்து செயல்படுவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து, கட்சியின் நன்மைக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. திட்டமிட்டு ஒருவரின் நலனுக்காக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கட்சி விதி 5ன்படி, உறிப்பினர்களை நீக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே உள்ளது.  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன், கட்சியின் 2 பங்கு உறுப்பினர்கள் அனுமதி அளிக்க வேண்டும். சுய விளக்கம் கேட்க வேண்டும். 
முதலில் தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் நீக்கம் செய்யலாம். அனைத்தும் பொதுக்குழுவில் மீறப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் நியமனம் மற்றும் நீக்கம் செய்ய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவர்களின் பதவிகாலம் முடியும் வரை இந்த அதிகாரம் தொடரும். இடையில் கலைக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர் பதவிகாலம் முடிந்த பின் புதிய பதவிகள் ஏற்படுத்துவதை எதிர்க்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். 
எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்க திட்டமிட்டு பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 4 மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என பொதுக்குழுவில் அறிவித்துவிட்டு இதுவரை நடத்தவில்லை. பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிப்பதற்கும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. புதிதாக தேர்தல் அறிவிப்பு வெளியிட்டால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக ஓ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது. 
அடுத்து வைத்திலிங்கம் வழக்கறிஞர் வாதிடுகையில், ‘’ஒருங்கிணைப்பாளர் நீக்கப்பட்ட பின் புதிய ஒருங்கிணைப்பாளர் நியிமிக்கப்பட்டு, அதன் பிறகே நடவடிக்கை எடுக்க முடியும். கட்சி விதிகளின்படி இருவரும் இணைந்து முடிவுகளை எடுக்க அனுமதி அளித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதிவி கலைக்கப்பட்ட பின் நீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது’’ என வாதிட்டனர். 
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடுகையில், ‘’அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பன்னீர்செல்வம் ஆகியோர் சுயேட்சையாக சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ளலாம். பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருந்த போது அவரின் சகோதரர் ராஜாவை எந்த விளக்கமும் அளிக்காதல் கட்சியில் இருந்து நீக்கனார். அப்போது, எந்த அடிப்படையில் நீக்கினார் என காரணம் கூறவில்லை. எந்த வகையில் எல்லாமல் வழக்குத் தொடர முடியுமோ அந்த வகையில் பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார். பொதுக்குழுவின் முடிவு இறுதியானது. அதில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது. 
பொதுக்குழுவுக்கு அனைத்து அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பொதுக்குழு முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுச்செயலாளர் பதவி ஏற்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பன்னீர் செல்வத்தை நீக்குவதற்கான முகாந்திரமும், போதுமான காரணங்களும் இருந்ததால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் பொறுப்பிலிருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்டார்.
 அதிமுக கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக 47 ஆண்டுகளுக்கு பிறகு கட்சி விதிகள் மாற்றப்பட்டது. 2017 ல் பொதுக்குழு முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது. 2022ல் மீண்டும் முதன்மை உறுப்பினர்களே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது’’என வாதிடப்பட்டது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com