வீட்டில் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணியராக பணியாற்றி வருகிறார் சிவக்குமார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராகவும் இருந்து வந்தார்.
இவர் மீது 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, பல்லாவரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது புகார் இருந்தது. இதன் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், ஈரோடு பெரியார் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.