ஒரு மாணவியை தலைமை ஆசிரியர் குருவம்மாள் கண்டித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கீழநம்பியாபுரம் கிராமத்தில் இந்து தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக குருவம்மாள் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இங்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை தலைமை ஆசிரியர் குருவம்மாள் கண்டித்துள்ளார்.
இதை அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்களுடன் பள்ளிக்கு வந்துள்ளார்கள். ஆவேசமாக பள்ளிக்குள் நுழைந்தவர்கள் தலைமை ஆசிரியை குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பாரத் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.