கிருஷ்ணகிரி: 'மகளின் கணவரைக் கொலை செய்தது ஏன்?' -நீதிமன்றத்தில் மாமனார் வாக்குமூலம்

கிருஷ்ணகிரி: 'மகளின் கணவரைக் கொலை செய்தது ஏன்?' -நீதிமன்றத்தில் மாமனார் வாக்குமூலம்
கிருஷ்ணகிரி: 'மகளின் கணவரைக் கொலை செய்தது ஏன்?' -நீதிமன்றத்தில் மாமனார் வாக்குமூலம்

மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் ஜெகனை வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர்

காதல் திருமணம் செய்து கொண்ட மருமகனை உறவினர்களுடன் சேர்ந்து மாமனாரே கழுத்தை அறுத்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதானவர் ஜெகன். இவர் அப்பகுதியில் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றபோதும் இந்தக் காதல் திருமணம் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் ஜெகன், கிட்டம்பட்டியில் இருந்து டைல்ஸ் வேலைக்காக காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் ஜெகனை வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அங்கு மக்கள் கூடியதால் சங்கர் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட உறவினர்கள் தப்பித்து ஓடி விட்டனர். தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஜெகனின் உடலை எடுக்க விடாமல் பொதுமக்களும், உறவினர்களும் போலீசாருடன் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழரசி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சராஜ் குமார் தாகூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து உறவினரிடம் சமாதானம் பேசினர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து, ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சங்கர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 
அப்போது, காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகளின் கணவரை கொலை செய்ததாகவும், மகளின் காதல் திருமணத்தால் விரக்தியில் இந்தக் கொலையை செய்ததாகவும் நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com