தி.மு.க தேர்தல் அறிக்கையும் வேளாண் பட்ஜெட்டும் - கொதிக்கும் விவசாயிகள் சங்கம்

தி.மு.க தேர்தல் அறிக்கையும் வேளாண் பட்ஜெட்டும் - கொதிக்கும் விவசாயிகள் சங்கம்
தி.மு.க தேர்தல் அறிக்கையும் வேளாண் பட்ஜெட்டும் - கொதிக்கும் விவசாயிகள் சங்கம்

குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பாக உள்ளது. இந்த பட்ஜெட் சர்க்கரை இல்லா இனிப்பாக உள்ளது என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். 
தமிழக அரசு மூன்றாவது முறையாக இன்று சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. இது குறித்து தஞ்சை விவசாயிகள் கூறுகையில்,  ’’எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின் அடிப்படையில் திமுக தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கும், கரும்புக்கு விலை அறிவிக்கப்பட்டது. அறிக்கையில் உள்ளபடி விலை அறிவிக்காததால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்னர். 
திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக பயிர் காப்பீடு அறிவிக்கப்படவே இல்லை. ரசாயன உரங்களை அரசே கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது’’ என்று விவாசாயி ஜீவக்குமார் தெரிவிதத்துள்ளார்.  
‘’நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாயும் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். ஆனால் அவர்கள் நெல் சன்ன ரகத்திற்கு 100 ரூபாயும், பொது ரகத்திற்கு 75 ரூபாயும் மட்டுமே அறிவித்துள்ளனர். 
இது தங்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. கரும்பு டன் ஒன்றிற்கு ரூ4,000 எதிர்பார்த்த நிலையில், வெறும் 195 ரூபாய் ஊக்கத்தொகை மட்டுமே அவர்கள் அறிவித்திருப்பது கரும்பு விவசாயிகளுக்கு  ஏமாற்றமே. தற்போது இடுபொருள், உரம், வண்டி கூலி, ஆட்கூலி, டீசல் என அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. ஆனால், இவர்கள் வெறும் 195 ரூபாய் மட்டுமே உயர்த்தி இருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை. எனவே கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் மறுபரிசீலனை செய்து உயர்த்தி வழங்க வேண்டும் என ’’என கரும்பு விவசாயி கோவிந்தராஜ் கூறுகிறார்.
’’தென்னை சாகுபடிக்கு ரூ20 கோடி ரூபாய் அறிவித்தது போதாது. ஏனென்றால் கஜா புயலால் தென்னை விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே தென்னை வளர்ச்சிக் கழகத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பட்ஜெட்டில் நம்மாழ்வார் பெயரில் விருதும் - பரிசு தொகையும் அறிவிப்பு மட்டுமே தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com