வீட்டில் போலீஸைக் குவித்தவுடன் பயப்பட நான் ஒன்றும் ‘சாவர்க்கர்' அல்ல - ராகுல் காந்தி

வீட்டில் போலீஸைக் குவித்தவுடன் பயப்பட நான் ஒன்றும் ‘சாவர்க்கர்' அல்ல - ராகுல் காந்தி
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ‘பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை’கருத்துக்காக டெல்லி போலீஸ் குழு 5 நாட்களில் மூன்றாவது முறையாக அவரது கதவைத் தட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 அம்ச பதில்களை அளித்தார்.

ஜம்மு- காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்” என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை மார்ச் 19 அன்று புதிய நோட்டீஸ் அனுப்பியது. டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்திற்கு அதிகாரிகள் குழுவை வழிநடத்திய சிறப்பு காவல் ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா, ’’ராகுல் காந்தி தனது கருத்துக்களில் குறிப்பிட்டுள்ள "பாதிக்கப்பட்டவர்கள்" பற்றிய தகவல்களை அவரிடம் கேட்கப்பட்டது’’எனக் கூறினார். காலை 10 மணியளவில்  ராகுல் காந்தியின் இல்லத்திற்கு வந்த போலீஸ் குழு, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் அவரைச் சந்திக்க முடிந்தது.

“நாங்கள் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது கருத்துகளைப் பற்றி சுருக்கமாகப் பேசினோம். நீண்ட யாத்திரை என்பதால், பலரைச் சந்தித்துப் பேசி வருவதாகவும் பிறகு தான் பேசியதற்காக பின்னணி தகவல்களை எங்களுக்குத் தருவதாகக் கூறினார். முடிந்தவரை விரைவில் தகவலைத் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்” என்று ஹூடா கூறினார்.

தாங்கள் வந்த சிறிது நேரத்திலேயே  ராகுல் காந்தி தனது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, காவல்துறைக்கு நான்கு பக்க பூர்வாங்க பதிலை அனுப்பினார். தகவலைப் பகிர்ந்து கொள்ள எட்டு முதல் 10 நாட்கள் வரை அவகாசம் கோரியதாகக் கூறினார். காவல்துறை வருகையின் போது ராகுல் காந்தியின் இல்லத்தில் இருந்த காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வியுடன் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. 

ஜனவரி 30 அன்று ஸ்ரீநகரில் தனது யாத்திரையின் முடிவில் ராகுல் காந்தி பேசுகையில், "பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்" என்று தன்னைச் சந்தித்த பலரும் கூறினார். பாரத் ஜோடா யாத்திரை டெல்லி வழியாகச் சென்றது, ராகுல் காந்தியும் இங்கு வசிப்பதால், அவர் அத்தகைய நபர்களை டெல்லியில் சந்தித்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி காந்தியின் இல்லத்திற்கு போலீஸ் குழு வருகை தந்தது இது மூன்றாவது முறையாகும்.

இதற்கிடையில், பல காங்கிரஸ் தலைவர்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு "எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதற்கும், துன்புறுத்துவதற்கும் பாதுகாப்பு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாக" கடுமையாக சாடியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “அதானி விவகாரத்தில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பவும், தொழிலதிபரைக் காப்பாற்றவும, ராகுல்காந்தி காவல்துறையால் விசாரிக்கப்படுகிறார்” என்றார்.

“பாரத் ஜோடோ யாத்திரை முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு டெல்லி காவல்துறையை ராகுல் காந்தியின் இல்லத்துக்கு விசாரணைக்கு அனுப்பியது சர்வாதிகார அரசின் மற்றொரு கோழைத்தனமான செயல்” என கார்கே ட்வீட் செய்துள்ளார். காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரத் ஜோடோ யாத்ராவில் ராகுல் காந்தியிடம் பெண்கள் தங்கள் பிரச்சனைகள் மற்றும் வலிகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான தளத்தை வழங்கினார். டெல்லி காவல்துறையின் இந்த வெட்கக்கேடான செயல் அதானி விவகாரத்தில் எங்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதற்றமாக இருப்பதை நிரூபிக்கிறது. இதுபோன்ற கோமாளித்தனங்களால் எங்கள் தைரியம் வலுப்பெற்றுள்ளது. நாங்கள் தொடர்ந்து பதில்களை எடுப்போம்’’ எனக் கூறினார்.


காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எம்.பி என்ற முறையில் ராகுல் காந்தி தேசத்தின் முன் அவ்வாறு கூறியிருந்தால், இந்த வழக்கு குறித்து கூடுதல் தகவல்களை சேகரிக்க காவல்துறைக்கு முழு உரிமை உள்ளது”என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்