பல விருதுகளைக் குவித்தும் மனமுடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் ; கணவரின் கண் முன் நிகழ்ந்த பரிதாபம்

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் தீ குளித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கும்பகோணம், அருகே பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர் நாராயணசாமி மகன் குணசேகரன். இவரது மனைவி சுமதி. இவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவர் ஊராட்சி மன்றத் தலைவராக சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவரது கணவர் குணசேகரனுக்கும், மனைவிக்கும் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சுமதி நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தனக்கு தானே ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார். வீட்டின் அறைகளையும் மூடிக் கொண்டு விட்டார். இதனை அறிந்து அவரது கணவர் குணசேகரன் உடனடியாக வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு போராடிய மனைவி சுமதியை காப்பாற்ற முயன்றபோது அவரும் தீ காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த கணவன், மனைவி இருவரையும் சிகிச்சைக்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவரது கணவர் குணசேகரன், கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து, தகவல் அறிந்த கபிஸ்தலம் காவல்துறை ஆய்வாளர் அனிதா கிரேசி, சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

https://youtu.be/lORQmJvzXUI
