வால்பாறை; பறவைகளை பாதுகாக்க வித்தியாசமான ஏற்பாடு

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் பல்வேறு வன விலங்குகள் மற்றும் பறவைகள் வசித்து வருகின்றன. அறிய வகையான சிங்கவால் குரங்கு, மற்றும் இருவாச்சி பறவைகளும் உள்ளன. விலங்குகள், பறவைகளை பாதுகாக்க வன துறையினரும், என்.சி.எஃப் தன்னார்வலர்கள் இணைந்து ஆராச்சி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்.சி.எஃப் தன்னார்வல நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வால்பாறையில் உள்ள வன விலங்குகள் மற்றும் பறவைகளை ஆராச்சி செய்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறையில் உள்ள பறவைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக நகரப்பகுதிகளில் உள்ள சுவர்களில் அங்கு வாழும் பறவை மற்றும் விலங்குகளை படம் வரைந்து, பொது மக்கள் பார்த்து பறவைகளை பாதுகாக்க நடவடிக்கையாக முதல் கட்டமாக நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் உள்ள சுவற்றில் அப்பகுதியில் வாழும் 38 பறவை மற்றும் விலங்குகள் படம் வரையப்பட்டது. பறவைகளின் படங்களையும், அதன் பெயர்களையும் வரைந்து உள்ளனர்.
இதனை நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி, ஆணையாளர்- பாலு, மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அவ்வழியாக செல்லும் பொது மக்களும் பள்ளி- கல்லூரி மாணவர்களும் பார்த்து தெரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

https://youtu.be/lORQmJvzXUI
