பதவியை மாற்றியதன் மர்மம் என்ன? வைத்திலிங்கம் பேச்சால் குழப்பத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

பதவியை மாற்றியதன் மர்மம் என்ன? வைத்திலிங்கம் பேச்சால் குழப்பத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்
அ.தி.மு.க கட்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்குள் பதவிச் சண்டை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று, பொதுக் குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக இ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ் அணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், அ.தி.மு.க.,வில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17 ம் தேதி அ.தி.மு.க கட்சி சார்பில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, தஞ்சாவூரில் அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி சார்பில் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘’வரும் 2026 வரை ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. பொதுச் செயலாளராக நானே கூட வரலாம்’’ என தெரிவித்து பேசினார். 

இந்நிலையில், தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாக கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் வைத்திலிங்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி மாற்றப்பட்டு, இணை ஒருங்கிணைப்பாளர் என மாற்றம் செய்து கூட்டத்திற்கான நோட்டீஸில் அச்சிட்டு, பல இடங்களில் போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் பேசும்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் 2026 வரை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தான் என்று கூறுகிறார். இந்த பேச்சால் அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்கள் புரியாத புதிராக பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்