‘எடப்பாடி பழனிசாமி கையில் கட்சி போனால்...’- வைத்திலிங்கம் காட்டம்

‘எடப்பாடி பழனிசாமி கையில் கட்சி போனால்...’- வைத்திலிங்கம் காட்டம்

எடப்பாடி கையில் கட்சி போனால் ஜாதி கட்சியாக மாறிவிடும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.அப்போது பேசிய அவர், எடப்பாடி கையில் கட்சி போனால் ஜாதி கட்சியாக மாறிவிடும். ஐந்தாண்டுகள் எடப்பாடியோடு தினமும் இருந்தவன் நான். அவருடைய குணம், எனக்கு தெரியும்.அவர் யாரையும் மதித்தது கிடையாது. தலைவருக்கு உள்ள தகுதி பழனிசாமிக்கு கிடையாது. ஓபிஎஸ் எளிமையான மனிதர், யாருக்கும் தீமை செய்யமாட்டார்.

யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆகலாம். ஆனால் தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காது. திருச்சி மாநாடு ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும்.எட்டு முறை தேர்தலில் தோல்வி அடைந்தவர் முதலமைச்சராவதற்கும், இந்த கழகத்தின் தலைவர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியிருக்கிறார். அவர் ஒரு மாநிலத் தலைவர் தான். முடிவெடுக்க வேண்டியது பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தான். பொதுச்செயலாளர் பிரச்னையில் நீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். ஏனென்றால் சட்ட விதிகள் எங்களுக்கு  ஆதரவாக இருக்கிறது. இன்னமும் தேர்தல் கமிஷனில் ஒருங்கிணைப்பாளர் தான் இருக்கிறது. அதனால் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.சட்ட விதிகள்படி, என்னென்ன ஆவணங்கள் செலுத்த வேண்டுமோ, அனைத்தையும் நாங்கள் செலுத்துவோம். 

டி.டி.வியாக இருந்தாலும், சசிகலாவாக இருந்தாலும் கட்சியை விட்டுப் பிரிந்து சென்ற எல்லோரும் சேர்ந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்.இது கூடிய விரைவில் நடக்கும். நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக  வரவே முடியாது. திமுகவினர்  காவல் நிலையத்தில் சென்று தங்கள் கட்சியினரையே தாக்கியது சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதை காண்பிக்கிறது என்று தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்