திருச்சியில் மாநாடு: மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் - ஓ.பி.எஸ்ஸின் அடுத்தகட்ட நகர்வு

திருச்சியில் மாநாடு: மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் - ஓ.பி.எஸ்ஸின் அடுத்தகட்ட நகர்வு

தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களை அழைத்து திருச்சியில் பெரிய அளவில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும், இதனைத்தொடர்ந்து, ஒவ்வாரு மாவட்டமாக சுற்றுப்பயணம் சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், "அ.தி.மு.க. என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கூட்டம் உள்ளது. அந்தக்கூட்டம் அ.தி.மு.கவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவின் அடிப்படை விதிகளின்படி உறுப்பினர்களால் மட்டுமே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படவேண்டும். அதைவிடுத்து, பிட்பாக்கெட் அடித்துச்செல்வது போன்று பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது. 

எடப்பாடி பழனிசாமி மீது அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் நம்பிக்கை வைத்திருந்தால், நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதற்காகவே, நாங்கள் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை விட்டுக்கொடுத்தோம். ஆனால், இடைத்தேர்தல் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வந்துள்ளது.  இதிலிருந்தே அவரை தொண்டர்களும், மக்களும் விரும்பவில்லை என தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அ.தி.மு.கவை மீட்பதுதான் எங்களது ஒரே நோக்கம். அன்று, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இப்படிதான் கட்சியை வழிநடத்தினார்களா?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை சர்வாதிகாரமாக அறிவித்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளபோது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது முறையல்ல. இப்போது பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசரம்.  எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதியும், அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. 

வரும் ஏப்ரல் மாதம் திருச்சியில் மாநாடு நடத்த உள்ளோம். இதனைத் தொடர்ந்து, ஒவ்வாரு மாவட்டமாகச் சென்று தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க உள்ளோம்" என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்