கி.வீரமணி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அ.தி.மு.க புகாருக்கு திராவிடர் கழகம் சொல்வது என்ன?

கி.வீரமணி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அ.தி.மு.க புகாருக்கு திராவிடர் கழகம் சொல்வது என்ன?

'திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கவேண்டும்' என அ.தி.மு.க. செய்தித்  தொடர்பாளரும், வழக்கறிஞருமான ஆர். எம். பாபு முருகவேல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற பதிவுத்துறை தலைவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

பாபு முருகவேல் அனுப்பியுள்ள புகார் மனுவில், 'கடந்த இரு தினங்களுக்கு முன்பு தி.க தலைவர் வீரமணி, நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதைப் போன்று செயல்பட்டுள்ளார்.

திராவிடர் கழகத்தின் வலைதளப் பக்கத்திலும் அவமதிப்புக்கு உட்படக்கூடிய கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கான அறிக்கையாக இருக்கிறது.

எனவே, அவர் மீது நீதித்துறையும் நீதிமன்றமும் தலையிட்டு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து, திராவிடர் கழகத்தின் பிரசார செயலாளரும், வழக்கறிஞருமான அருள்மொழியிடம் குமுதம் இணையதளத்துக்காக கேட்டோம். "ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அவர்களை எதிர்த்து தலையங்கம் எழுதியதற்காக, கைது செய்யப்பட்டவர்கள் 10 பேர். அதில், தமிழகத்தைச் சேர்ந்தவரும் குடியரசு பத்திரிகையைச் சேர்ந்தவருமான கண்ணம்மாவும் அவரது அண்ணன் கிருஷ்ணசாமியும் அடக்கம்.  அவர்கள்தான் அதன் வெளியீட்டாளர்கள். ஆங்கில அரசை எதிர்த்து தலையங்கம் எழுதியது பெரியார். எனவே, இதுபோன்ற பல வழக்குகளை நாங்கள் சந்தித்துள்ளோம்.

பின்னர், 'இளம் தமிழர்களே புறப்படுங்கள் போருக்கு' என தலையங்கம் எழுதியதால் மணியம்மையார் மீதும் வழக்கு போட்டனர். அதேபோல, ஆசிரியர் கி.வீரமணி மீதும் வழக்கு போட்டுள்ளனர். இதுபோன்ற பல வழக்குகளை நாங்கள் ஏற்கனவே சந்தித்துள்ளோம். எனவே, எங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க இதை வாய்ப்பாகவே பார்க்கிறோம்'' என்கிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்