'தேர்தலை அறிவித்தது சட்டவிரோதம்' - ஓ.பி.எஸ் தரப்பின் அவசர மனு; விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்

'தேர்தலை அறிவித்தது சட்டவிரோதம்' - ஓ.பி.எஸ் தரப்பின்  அவசர மனு; விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக்கோரி, சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியனின் முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தல் அறிவித்து சட்டவிரோதம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை, அதாவது மார்ச் 19ம் தேதி காலை 10.30 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வருகிறது.

இதனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்