’அ.தி.மு.க.,வை சீரழிக்கிறார்; எடப்பாடி பழனிசாமி திருந்துவதாக இல்லை’- ஓபிஎஸ் குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், பிக்பாக்கெட் அடிப்பது போன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க நினைக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்., ‘’பிக்பாக்கெட் அடிப்பது போன்று அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விதிகளை மாற்றி பதவியை பிடிக்க நினைக்கிறார். அதிமுக தொண்டர்கள் பயப்பட வேண்டாம். கட்சியை நாம் மீட்டெடும்ப்போம்.
சாதாரண தொண்டன் கூட போட்டியிட முடியும் என்கிற சூழலை மாற்றி எடப்பாடி தரப்பு செயல்படுகிறது. உரிய விதிகளின்படி அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறவில்லை. தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே அலர்ஜி ஏற்படுகிறது. ஈ.பி.எஸ் சர்வாதிகாரியாக செயல்படுகிறார். அவருக்கு எதிர்ப்பு அலை உருவாகி வருகிறது.
எங்களை கட்சியிலிருந்து நீக்கும் தகுதி யாருக்கு இருக்கிறது? அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அ.தி.மு.க தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.தேர்தலில் தோல்வியை சந்தித்தபோதும் எடப்பாடி பழனிசாமி தரப்பு திருந்துவதாக இல்லை. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

https://youtu.be/lORQmJvzXUI
