திருவள்ளூர்: ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி -தடுக்கப்பட்டது எப்படி?

திருவள்ளூர்: ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி -தடுக்கப்பட்டது எப்படி?
கும்மிடிப்பூண்டி, சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் அடி பாகத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அபாய ஒலி எழவே அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் தடையவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகைகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் கையுறை பயன்படுத்தி இயந்திரத்தை உடைத்ததால் கொள்ளையர்களின் கைரேகையை கண்டறிய முடியாமல் திகைத்தனர். மோப்பநாய் நிக்கியை வரவழைத்து சோதனை மேற்கொண்டதில் மோப்ப நாயும் அருகாமையில் உள்ள காலியிடங்களை சுற்றி மீண்டும் ஏடிஎம் மையத்தை நோக்கி திரும்பி வந்ததால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்