பா.ஜ.க கூட்டணி; அண்ணாமலை பேச்சு -ஓ.எஸ்.மணியன் சொல்வது என்ன?

பா.ஜ.க கூட்டணி; அண்ணாமலை பேச்சு -ஓ.எஸ்.மணியன் சொல்வது என்ன?

தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். 

கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் பங்கேற்று, வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பூத் கமிட்டி அமைப்பது, கட்சிக்கு நிதி வசூலிப்பது ஆகியவை குறித்து பேசினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் காந்தி, சரஸ்வதி, பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், ‘வரும் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்ற முடிவு எடுத்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக கட்சி பணி செய்வேன்’ என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

இந்த தகவலை பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி அதிரடியாக மறுத்து குமுதம் இணைய தளத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.  

இந்த பரபரப்பான சூழலில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘யாருடன் கூட்டணி? யாருக்கு எத்தனை சீட்? என்பதை அதிமுகவே தீர்மானிக்கும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி’ என்றார்.

அதிமுக உடன் கூட்டணியை அண்ணாமலை எதிர்த்ததாக தகவல்கள் வெளியான நிலையில் ஓ.எஸ்.மணியன் தெரிவித்து உள்ள கருத்து தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்