'யாருடனும் கூட்டணி இல்லை' - கர்நாடகா காங்கிரஸ் தலைவர் திட்டவட்டம்

'யாருடனும் கூட்டணி இல்லை' - கர்நாடகா காங்கிரஸ் தலைவர் திட்டவட்டம்

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்தல், தேர்தல் பிரசாரம், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விவாதிப்பதற்கான காங்கிரஸ் கட்சியில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால், சித்தாராமையா, முகுல் வான்சிங், டி.கே.சிவகுமார்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், ஏற்கனவே இருக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவலும் வெளிவந்துள்ளன. 

இதனையடுத்து, டி.கே.சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது," கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும், தனித்துப் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார். மேலும், கர்நாடகாவில் தனியாக ஆட்சி அமைப்போம் என்றும் கூறியுள்ளார். 

கர்நாடகாவில், ஏற்கனவே பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் டி.கே.சிவகுமாரின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்