முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் நாச்சியார், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி உயிரிழந்தார். தாயின் இறுதி அஞ்சலி நிறைவடைந்த பின்னர், ஓபிஎஸ் தற்போதுதான், சொந்த ஊரில் இருந்து சென்னை வந்திருக்கிறார். ஓபிஎஸை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வெளியில் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அங்கு கூடியிருந்த ஓபிஎஸ்அவரது ஆதரவாளர்கள், ' எடப்பாடி மேல நடவடிக்கை எடுங்க.. புடிச்சு ஜெயில்ல போடுங்க'சார்" என முழக்கமிட்டனர்.