இந்நிலையில் இன்று லப்பைகுடிகாடு பகுதியில் நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்றிருந்தார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் கருப்புக்கொடி காட்டுவதற்காக தயாராக நின்றிருந்தனர். அவர்களில் சிலரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அமைச்சரின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து நிகழ்ச்சி முடித்துக் கொண்டு திரும்பி சென்ற சிறிது நேரத்திற்கு பின்னர் திடீரென்று கடைவீதி பகுதியில் ஒன்று திரண்டு 30க்கும் மேற்பட்டோர் அமைச்சர் சிவசங்கருக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி, கருப்பு கொடி காட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.