வாய்ப்பு இருந்தால் காலத்தின் கட்டாயம் என்றால் டி.டி.வி.தினகருடன் இணைந்து செயல்படுவேன்; சசிகலாவை விரைவில் உறுதியாக சந்திப்பேன்
வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், சசிகலாவை உறுதியாக விரைவில் சந்திப்பேன் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
பாஜக நிர்வாகிகள் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து ஒரு பக்கம் ஆதரவு திரண்டு வந்தாலும், ஓ.பி.எஸ்.-ன் ஆதரவாளர்கள் 'தொடர் தோல்வியை சந்தித்த எடப்பாடி' என இபிஎஸ் -சை வெளியேற சொல்லி போஸ்டர்களை ஒட்டி வருவதும் நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உட்பட்ட தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பல்வேறு இடங்களில் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டசபையில் வரும் 20ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கை வெளிவந்ததும் அதுபற்றிய எனது கருத்தை தெரிவிக்கிறேன் என கூறினார்.
வாய்ப்பு இருந்தால் காலத்தின் கட்டாயம் என்றால் டி.டி.வி.தினகருடன் இணைந்து செயல்படுவேன். சசிகலாவை விரைவில் உறுதியாக சந்திப்பேன் என கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.
மேலும் பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை விட மக்கள் தீர்ப்பையே எதிர்நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்றார் ஓபிஎஸ்.