அதிமுக - பாஜக கூட்டணியை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வரப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் 5 வது நீரேற்று நிலையத்தில் சோதனை ஓட்டத்தை பார்வையிட்டு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், ‘’முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மதுரை விமான நிலையத்தில் விமர்சித்து பேசி முகநூலில் பதிவிட்ட
சக பயனாளி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடமை திமுக அரசிற்கும், காவல்துறைக்கும் உள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் வரும் போது காவல்துறை உரிய பாதுக்கப்பு அளித்து இருக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு கொடுக்காத திமுக அரசின் மெத்தனபோக்கு வேதனைக்குரிய ஒன்று.
எதிர்கட்சியயை நசுக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு இது போன்ற பணிகளை செய்து வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணியை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை. அந்தியூர் பொது கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசவில்லை. சொல்லாத ஒன்றை சொல்லியிருப்பது வருத்திற்குரியது’’என அவர் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவால் தான் அதிமுக தோற்றது என செங்கோட்டையன் பேசியதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ள அவர், அதிமுக -பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.