அமைச்சர் நேரு முன்னிலையில் தாக்கப்பட்ட தொண்டர் - தி.மு.க எம்.எல்.ஏ செயலால் அடுத்த சர்ச்சை

அமைச்சர் நேரு முன்னிலையில் தாக்கப்பட்ட தொண்டர் - தி.மு.க எம்.எல்.ஏ செயலால் அடுத்த சர்ச்சை

அமைச்சர் நேரு முன்னிலையில் தாக்கப்பட்ட தொண்டர் - தி.மு.க எம்.எல்.ஏ செயலால் அடுத்த சர்ச்சை

கருணாநிதியிடம் பாராட்டை பெற்ற துரை.சந்திரசேகர்தான் தொண்டர் ஒருவரை தாக்கி இருக்கிறார்.

தொண்டர் ஒருவரை பொதுவெளியில் அமைச்சர் நேரு முன்பே திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தாக்கியது சர்ச்சையை எழுப்பி இருக்கிறது. 
திருச்சியில் திமுக எம்.பி., திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கும் திமுக அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட அடிதடி மோதல் பரபரப்பாகி இருக்கிறது. இந்நிலையில் திமுக தொண்டரை பொதுவெளியில் அமைச்சர் நேரு உடனிருக்கும்போதே எம்.எல்.ஏ ஒருவர் அடித்திருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 214 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவை நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க அவர் தயாரான போது பின்னால் நின்ற திமுக உறுப்பினர் சத்தம் போட்டுள்ளனர். அப்போது நேருவிற்கு பின்னால் நின்ற திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், திடீரென பின்னால் நின்றிருந்த திமுக தொண்டர் ஒருவரை கையால் தாக்கினார். பின்பு மீண்டும் ஒரு முறை முகத்தில் குத்த முயன்றார். பின்பு அந்த நபரை திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் ஒருமையிலும் திட்டினார். இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவையாறு தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ. 1989ல் சிவாஜி கணேசனை தோற்கடித்து கருணாநிதியின் பாராட்டை பெற்றவர் துரை சந்திரசேகர். நீ ஜெயிச்சது சந்தோசம்தான். என் நண்பன் தோத்தது வருத்தம் என்றாராம் கருணாநிதி. அப்படி பாராட்டை பெற்ற துரை.சந்திரசேகர்தான் தொண்டர் ஒருவரை தாக்கி இருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com