"முதலமைச்சர் பதில் சொல்வாரா?' - திருச்சி சம்பவத்தில் கேள்வியெழுப்பும் எடப்பாடி பழனிசாமி

"முதலமைச்சர் பதில் சொல்வாரா?" - திருச்சி சம்பவத்தில் கேள்வியெழுப்பும் எடப்பாடி பழனிசாமி
"முதலமைச்சர் பதில் சொல்வாரா?' - திருச்சி சம்பவத்தில் கேள்வியெழுப்பும் எடப்பாடி பழனிசாமி

வன்முறை சம்பவத்திற்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி கண்டனம்

திருச்சி காவல் நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களும், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வன்முறை சம்பவத்திற்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு விழாவில் திருச்சி எம்.பி. சிவாவின் பெயர் போடவில்லை என்பதற்காக, அமைச்சர் கே.என்.நேருவிற்கு கருப்புக் கொடி காட்ட முயற்சித்ததாக திருச்சி சிவா ஆதரவாளர்கள் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது காவல் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் காவல் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர் ஒருவரை திருச்சி நீதிமன்ற காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com