பட்டாகத்தியுடன் ரீல்ஸ் வீடியோ: கோவை தமன்னா சிக்கியது எப்படி?

பட்டாகத்தியுடன் ரீல்ஸ் வீடியோ: கோவை தமன்னா சிக்கியது எப்படி?
பட்டாகத்தியுடன் ரீல்ஸ் வீடியோ: கோவை தமன்னா சிக்கியது எப்படி?

தற்போது இது மாதிரியான வீடியோக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிரமில் ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண் தமன்னாவை, காவல்துறை கைது செய்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை சேர்ந்த தமன்னா வினோதினி என்ற இளம்பெண், பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிகரட் புகைத்தபடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் விசாரணை நடத்தி அந்த இளம்பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பட்டா கத்தியுடன் இருக்கும் வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டதாகவும், தற்போது இது மாதிரியான வீடியோக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே கஞ்சா வழக்கில் உள்ளே சென்று வந்துள்ளேன். நான் திருமணமாகி  ஆறு மாத கர்ப்பிணியாக கணவருடன் வாழ்ந்து வருகிறேன். தனது நண்பர்களை காவல்துறையினர் பிடித்து வைத்துக்கொண்டு, நான் வந்தால் தான் விடுவேன் என மிரட்டி வருவதாக வீடியோ வெளியிட்டார். தகவல் தொழில்நுட்ப உதவியுடன், அந்த வீடியோவை ஆய்வு செய்த சைபர் கிரைம் காவல்துறை, தமன்னா மறைவிடத்தை கண்டுபிடித்தனர். 
சேலம், சங்ககிரி அருகே அவரை கைது செய்து, கோவையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரீல்ஸ் வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது. உடன் இருப்பவர்கள் யார்? கோவை சமுக வலைதளங்களில் ரவுடியிசம் செய்தவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com