புதிய வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை

புதிய வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை
புதிய வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை

இந்த வைரஸ் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் தாக்கும் தன்மை கொண்டது.

புதுச்சேரியில் அண்மை காலமாக வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் ஏராளமானோர் பாதிப்படைந்து வருகின்றனர். 
இந்தியாவில் இன்புளுயன்சா ஏ வைரஸின் துணை வைரசான எச்3என்2 என அழைக்கப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் தாக்கும் தன்மை கொண்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவுவதை ஒட்டி 16-ம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 1 முதல் முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளித்து பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com