ஆம்பூர்: 15 வயது சிறுமிக்கு நடந்த திருமணம் - அதிகாரிகளின் விசாரணையால் நேர்ந்த கொடூரம்

ஆம்பூர்: 15 வயது சிறுமிக்கு நடந்த திருமணம் - அதிகாரிகளின் விசாரணையால் நேர்ந்த கொடூரம்
ஆம்பூர்: 15 வயது சிறுமிக்கு நடந்த திருமணம் - அதிகாரிகளின் விசாரணையால் நேர்ந்த கொடூரம்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவியை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.

ஆம்பூர் அருகே குழந்தை திருமணம் நடந்த 15 வயது சிறுமி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு கிரீன் குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரி. கணவனை இழந்த இவருக்கு  9 ஆம் வகுப்பு படிக்கும் 
(15 வயது) மகள் உள்ளார். இந்நிலையில், மதனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் வயது (24)  என்பவருடன் கடந்த 27.08.2022 அன்று சென்னையில் திருமணம் நடந்துள்ளது.
இந்த தகவல் வேலூர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தது. இதனைத் தொடர்ந்து வேலூர் சமூகநலத்துறை அதிகாரிகள் ஈச்சம்பட்டு பகுதிக்கு 24.11.2022 அன்று  உமராபாத் காவல்துறையினர் உடன் சென்றனர். மாணவியின் வீட்டுக்கு  சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவியின் தாய் ராஜகுமாரி மற்றும் 15 வயது மாணவி விசாரணைக்காக அழைத்து சென்று கவுன்சிலிங் வழங்கி மீண்டும் ஈச்சம்பட்டு பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு சேர்த்தனர்.
பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென வீட்டின்  அறையிலிருந்து உடல் முழுவதும் தீப்பற்றி  எரிந்த நிலையில் வெளியே வந்துள்ளார். உடனடியாக தாய் ராஜ்குமாரி மற்றும் உறவினர்கள் 15 வயது மாணவியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மாணவியிற்கு  தீகாயங்கள் 50% உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவியை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
மாணவியை தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வீட்டில் விளக்கேற்றும்போது ஏதாவது விபத்து ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் உமராபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com