சாதி சான்றிதழ் வழங்க மறுத்த மாவட்ட வருவாய் அலுவலர் ; அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

சாதி சான்றிதழ் வழங்க மறுத்த மாவட்ட வருவாய் அலுவலர் ; அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்
சாதி சான்றிதழ் வழங்க மறுத்த மாவட்ட வருவாய் அலுவலர் ; அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

10,000 ரூபாய் அபராதத்தை மதுரை இலவச சட்ட உதவிகள் மையத்திற்கு வழங்க வேண்டும்

சாதிச்சான்றிதழ் வழங்க மறுத்த மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
திருச்சியை சேர்ந்த நித்யா என்பவர் தனது மகன் மற்றும் மகளுக்கு காட்டு நாயக்கன் சாதி சான்றிதழ் வழங்கக் கோரிய தங்களது மனுவை அளித்தார். அதனை திருச்சி வருவாய் மண்டல அலுவலர் நிராகரித்தார். ரத்து செய்ததையடுத்து, தங்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழை வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, "குழந்தைகளின் தந்தை காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் திருச்சி வருவாய் மண்டல அலுவலரிடம் இருந்து அதற்கான சாதி சான்றிதழ் பெற்றுள்ளார். மனுதாரர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். காட்டுநாயக்கன் சாதி சான்றுகளை குழந்தைகளுக்கு வழங்க கோரி மனுதாரர் விண்ணப்பித்த நிலையில், திருச்சி வருவாய் மண்டல அலுவலர், இணையம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மனுதாரரும் விண்ணப்பித்துள்ளார். அதோடு இதுவரை கணவரது சாதிக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எந்த பலன்களையும் பெறவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்கையில் அவர்களின் குழந்தைகளுக்கு தந்தையின் சாதியின் அடிப்படையிலோ அல்லது தாயின் சாதியின் அடிப்படையிலோ ஜாதி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அரசின் இரண்டு அறிவிப்புகள் மிக தெளிவாக உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தனக்கு விதிக்கப்பட்ட 10,000 ரூபாய் அபராதத்தை மதுரை இலவச சட்ட உதவிகள் மையத்திற்கு வழங்க வேண்டும்" எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மனுதாரரின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்து திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் மனுவை பரிசீலித்து, சட்டத்தின்படி சாதி சான்றிதழ்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com