ஒரு சொட்டு ரத்தத்தை கூட நாம் உருவாக்க முடியாது
தான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், “அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தேன்.அதற்குள் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.
சிறுநீரக பாதிப்பு காரணமாக நான் அதிகம் பேரை சந்திக்க இயலாது என மருத்துவர்கள் கூறினர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மருத்துவர்கள் கூறியதால் அரசியலில் இருந்து விலகினேன்.
ஒரு சொட்டு ரத்தத்தை கூட நாம் உருவாக்க முடியாது என தெரிந்திருந்தும் சிலர் கடவுள் இல்லை என்கின்றனர்.கடவுள் இல்லை என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.
எண்ணங்கள் நன்றாக இருந்தால் மனம் நன்றாக இருக்கும்;மனம் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.