'யாரையும் நம்பி அதிமுக இல்லை, எதிரி தி.மு.க-தான்' - முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்

'யாரையும் நம்பி அதிமுக இல்லை, எதிரி தி.மு.க-தான்' - முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்
'யாரையும் நம்பி அதிமுக இல்லை, எதிரி தி.மு.க-தான்' - முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்

'ஏழை மக்களின் கண்ணீரில் தான் கார்ப்பரேட் நிறுவனம் வர வேண்டுமா?'

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர்...

"முதல்வர் ஈகோ பார்க்காமல் ஆளுநரை நேரில் சந்திக்க வேண்டும். பல நாட்களுக்குப் பிறகு ஆளுநர் மசோதாவைத் திருப்பி அனுப்பியது உறவு நிலை மேம்படாத சூழ்நிலையைத் தான் காட்டுகிறது. இந்த சட்டம் வருவதற்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்துள்ளது.ஆளுநரும்,முதல்வரும் மசோதாவை மாற்றி மாற்றி அனுப்பி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசுக்குத் தான் இதற்குச் சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு எனக் கூறினால் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யலாம்.ஆன்லைன் சூதாட்டத்தைத் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்ற ஒருமித்த கருத்து தமிழகத்தில் உள்ளது.

மத்திய அரசின் நிறுவனமான என்எல்சியுடன் திமுக அடிமை சாசனம் செய்துள்ளது.நிலம் எடுக்கும் போது உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் தொடமுடியாது ஏழை மக்களின் குரல்வளையை நெரிப்பது போல் நடந்து கொண்டால் யார் ஏற்றுக் கொள்வார்கள்.அதிமுக மாவட்டச் செயலாளர் அருண்மொழித் தேவனைக் கைது செய்தது தவறான செயல்.என்எல்சி நிறுவனம் முன்னாள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத்தால் மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.இது ஒரு தவறான அணுகுமுறை ஏழை மக்களின் கண்ணீரில் தான் கார்ப்பரேட்  நிறுவனம் வர வேண்டுமா.

இரட்டை இலை சின்னம் மீட்டெடுக்கப்பட்டு முழு கட்சியும் தற்போது எடப்பாடி கையில் வந்த பின்பு தற்போது பழையதைப் பற்றிப் பேசி பயனில்லை.எங்கள் முன்னால் இருக்கக்கூடிய "எதிரி  திமுக" அதை முழுமூச்சோடு எதிர்க்கக் கூடிய சக்தி அதிமுகவிற்கு மட்டும் தான் உள்ளது. இனிமேல் கட்சி இரண்டாக உடைந்து விட்டது மூன்றாக உடைந்து விட்டது  எனக் கூறுவது அர்த்தமில்லை.

திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக செயல்பட்டது.ஆனால் தற்போது பாஜகவை நம்பித்தான் திராவிட கட்சிகள் உள்ளது.அதிமுக தனது சொந்தக்காலில் நிற்கக்கூடிய கட்சி.யாரையும் நம்பி அதிமுக இல்லை எடப்பாடி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டுவிட்டது கூட்டணி தொடரும் ஆனால் அது சுயமரியாதையுடன்  தான் இருக்கும் தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அதிமுகவின் முதன்மை தன்மையை விட்டுத் தராமல் எடப்பாடி பழனிச்சாமி சரியான முடிவு எடுப்பார்" என கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com