சொந்த ஊருக்குச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் தீயில் கருகி பலி

சொந்த ஊருக்குச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் தீயில் கருகி பலி
சொந்த ஊருக்குச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் தீயில் கருகி பலி

சபரிநாத் மற்றும் சாந்தி இருவரையும் காப்பாற்ற முயன்றனர்.

மனைவியின் வருடாந்திர சடங்களைச் செய்ய பொள்ளாச்சிக்குச் சென்ற சென்னை அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீயில் கருதி பரிதாபமாக பலியானார்.
பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாத் (40). இவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், வீட்டின் ஒரு பகுதியை சாந்தி என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். சாந்தி கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த வருடம் தனது மனைவியின் வருடாந்திர சடங்களைச் செய்ய பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார். அப்போது, ஆய்வாளர் சபரிநாத் வீட்டில் பயங்கர சத்தம் கேட்டதும் கீழ் வீட்டில் குடியிருந்த சாந்தியின் உறவினர்கள் மேலே சென்று பார்த்தபோது, சபரிநாத் மற்றும் சாந்தி ஆகிய இருவரும் தீயில் எரிவது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே, இது தொடர்பாக, பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்புதுறையிருக்கு  தகவல் கொடுத்தனர். 
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு வீரர்கள் தீயை அணைத்து, சபரிநாத் மற்றும் சாந்தி இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்கள் இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் வெடித்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com