கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு தேர்தல் பணியாற்றிய, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், வட மாநில தொழிலாளர்கள் பிரச்னையை கையிலெடுத்து, பீஹார் அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். ரயிலில் வட மாநில தொழிலாளர் ஒருவர் தாக்கப்படும் வீடியோவை, தமிழக ரயில்வே காவல் துறை, பிப்ரவரி 16-ம் தேதி வெளியிட்டது. இதனை தனது 'ட்விட்டர்' பக்கத்தில் பகிர்ந்த பிரசாந்த் கிஷோர், 'இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை, பீஹார் அரசு கேட்க வேண்டும்' என முன்பு தெரிவித்து இருந்தார்.