திமுக கூட்டணியில் வலிமையாக, இணக்கத்துடன் இருக்கிறோம் - விசிக தலைவர் திருமாவளவன்

திமுக கூட்டணியில் வலிமையாக, இணக்கத்துடன் இருக்கிறோம் - விசிக தலைவர் திருமாவளவன்
திமுக கூட்டணியில் வலிமையாக, இணக்கத்துடன் இருக்கிறோம் - விசிக தலைவர் திருமாவளவன்

மத்திய பாஜக அரசு ஆளுநரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பாக எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றுவருகிறது. அங்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “முதலமைச்சர் முகஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் புகைப்படக் கண்காட்சி பணியை பாராட்டுகிறேன். அமைச்சர் சேகர்பாபு கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாசியாக இருந்து களப்பணி ஆற்றி வருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக கூட்டணிக்கு விசிக வர வேண்டும் என அன்பின் அடிப்படையில் கூறியுள்ளார். அவருடைய அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி. திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம். திமுக கூட்டணியை அகில இந்திய அளவில் கொண்டு செல்ல இருப்பதே அடுத்த கட்ட பணி.
ஸ்டாலின் தொண்டனாக தன் வாழ்வை தொடங்கியவர், அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளார். உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார். பொதுவாழ்வில் சாதிக்க துடிக்கும் அனைவரும் இந்த கண்காட்சியை பார்க்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டத்தை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மனிதாபிமானம் என்பது கேள்வி குறியாகியுள்ளது. ஆன்லைன் தடை மசோதாவை சட்டத்தின் அடிப்படையில் முடிவு எடுக்காவிட்டாலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் கூட முடிவெடுக்க வேண்டும். ஆன்லைன் ரம்மி சூதாட்ட நிறுவனர்கள் தனிப்பட்ட முறையில் ஆளுநரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பாஜக அரசு ஆளுநரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com