ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்- தலைமறைவான அமமுக பிரமுகருக்கு போலீசார் வலைவவீச்சு

ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்- தலைமறைவான அமமுக பிரமுகருக்கு போலீசார் வலைவவீச்சு
ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்- தலைமறைவான அமமுக பிரமுகருக்கு போலீசார் வலைவவீச்சு

ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் அ.ம.மு.க. பிரமுகர் ராமு உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, விஜயகுமார் என்பவரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் அ.ம.மு.க. பிரமுகர் ராமு உள்ளிட்ட 5 பேர் மீது சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான ராமுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
சமயபுரம் மேற்கு வீதியில் வசித்து வருபவர் விஜயகுமார். சமயபுரம் அருகே உள்ள ஈஞ்சூர் கிராமத்திலும் மற்றும் சமயபுரம் மேல வீதியிலும் இவரது தாத்தாவுக்கு சொந்தான வீடு மற்றும் நிலம் உள்ளதாகவும், இந்த வீடு நீதிமன்றம் மூலம் ஏலம் எடுத்த வீடு என்றும் கூறப்படுகிறது. 
இந்தநிலையில், விஜயகுமாருடன் சமயபுரம் அருகே ஈஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் ராமு நெருங்கிப்பழகி வந்துள்ளார்.
நாளடைவில், விஜயகுமாரின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளாரும், முன்னாள் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு தலைவருமான ராமு, கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் விஜயகுமாரின் சொத்துக்களை போலியாக சிட்டா அடங்கள் சான்றிதழ் பெற்று, மண்ணச்சநல்லூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜெயக்குமாரின் சொத்துக்களை தங்களது சொத்துக்கள் என பதிவு செய்ய சார் பதிவாளரை அணுகி உள்ளனர்.
ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர் சந்தேகம் இருப்பதாக கருதி உண்மை தன்மையை அறியவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களை சரிபார்க்க பணித்துள்ளார். இதனிடையே, அ.ம.மு.க. பிரமுகர் ராமு உள்ளிட்ட 5 பேர், 25 லட்சம் ரூபாய் தங்களுக்கு தரவேண்டும் இல்லை என்றால் உன்னைக்கொலை செய்து விடுவோம் என்று ஆயுதங்களைக்கொண்டு விஜயகுமாரை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. உயிர் பயத்தால் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டு பணத்தை எடுத்து வருவதாக கூறிய விஜயகுமார், இது தொடர்பாக சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரனிடம் புகார் அளித்துள்ளார். 
புகாரின் பேரில் நடத்திய விசாரணை நடத்திய போலீசார், பணம் கேட்டு மிரட்டல், மோசடியில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட, வி.துறையூரைச் சேர்ந்த அங்கமுத்து மகன் இளையராஜா, பாரதியார் நகரைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி, ஜான்சன் குமார், லால்குடி அருகே சாத்தம்பாடி பகுதியைச் சேர்ந்த மணிமகன் ரகுநாத் ஆகிய 5 பேர் மீது நிலமோசடி உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மிதுன்சக்கரவர்த்தி என்பவர் மட்டும் போலீசார் வசம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே, இளையராஜா, ஜான்சன்குமார், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com