அரசியல்
’காங்கிரஸ் ஆட்சியில் மின் வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு’ - மத்திய அமைச்சர் அடடே விளக்கம்
’காங்கிரஸ் ஆட்சியில் மின் வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு’ - மத்திய அமைச்சர் அடடே விளக்கம்
ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதால் காங்கிரஸ் கட்சி மன சமநிலையை இழந்துவிட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது போதிய அளவு மின்சாரம் வழங்கப்படவில்லை. அதனால்தான் மக்கள் தொகை அதிகரித்தது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஹஸ்சன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சர்ச்சையாக பேசினார். ’’கார்நாடக காங்கிரஸ் ஆட்சியின்போது போதிய அளவு மின்சாரம் வழங்கப்படவில்லை. அதனால்தான் மக்கள் தொகை அதிகரித்தது. ஏனெனில் அவர்கள் ஆட்சி காலத்தில் மின்சாரம் உரிய முறையில் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரகாலாத் ஜோஷி காங்கிரஸ் கட்சியை மிகக்கடுமையாக விமர்சித்து இருந்தார். "அதிகாரத்தில் இருந்து நீண்ட காலம் ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதால் காங்கிரஸ் கட்சி மன சமநிலையை இழந்துவிட்டது. ராகுல் காந்தி தனக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கிடைப்பதில்லை என்கிறார். ஆனால், அவர் பேசும்போது எல்லாம் எந்த வித ஆதாரங்களும் இன்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை குறித்து கேட்டால் எந்த ஆதாரங்களையும் கொடுப்பது இல்லை" என்றார்.