ஓ.பி.எஸ் முகாமில் இருந்து அடுத்த விக்கெட் - அ.தி.மு.க-வில் இணைந்த செந்தில்முருகன்

ஓ.பி.எஸ் முகாமில் இருந்து அடுத்த விக்கெட் - அ.தி.மு.க-வில் இணைந்த செந்தில்முருகன்
ஓ.பி.எஸ் முகாமில் இருந்து அடுத்த விக்கெட் - அ.தி.மு.க-வில் இணைந்த செந்தில்முருகன்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

ஓபிஎஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
ஓபிஎஸ் அணி சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் வாபஸ் பெற்ற செந்தில் முருகன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக இன்று ஓபிஎஸ் அறிவித்தார். அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்து இருந்தார். ஈரோடு இடைத்தேர்தல் நெருங்கிய போது உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்டி அதிமுக வேட்பாளரை அறிவிக்க உத்தரவிட்டது. இதனால், ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த செந்தில் முருகன் அதனை வாபஸ் பெற்றார். ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகனுக்கு, ஓ.பன்னீர்செல்வம் புதிய பதவி அளிக்க இருப்பதாக கூறப்பட்டது. 
செந்தில் முருகனை அதிமுக அமைப்புச் செயலாளராக நியமித்து உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார். இந்நிலையில் செந்தில் முருகன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com