ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரான செந்தில் முருகன் நீக்கம்- ஓபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரான செந்தில் முருகன் நீக்கம்- ஓபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரான செந்தில் முருகன் நீக்கம்- ஓபிஎஸ் அறிவிப்பு

செந்தில் முருகன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தரப்பு சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் வாபஸ் வாங்கிய செந்தில் முருகன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். 

செந்தில் முருகன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை அறிவிக்க உத்தரவிட்டது. இதனால் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த செந்தில் முருகன் அதனை வாபஸ் பெற்றார். ஓ.பன்னீர்செல்லம் அணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகனுக்கு ஓ.பன்னீர்செல்வம் புதிய பதவி அளிக்க இருப்பதாக கூறப்பட்டது. 

செந்தில் முருகனை அதிமுக அமைப்புச் செயலாளராக நியமித்து உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார். இந்நிலையில் செந்தில் முருகன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com