234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் வெறும் நான்கு எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாஜக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில் தன்னை முக்கிய எதிர்க்கட்சியாக முன்னிறுத்திக் கொள்ளப்பார்த்தது. அப்போதே பிரச்னை தொடங்கியது. இந்நிலையில், இன்று நடைபெறுகிற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பொதுச்செயலாளர் தேர்வு, பாஜகவுடன் மோதல் பாஜக கூட்டணியை விட்டு விலகலாமா? போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை தாண்டி தமிழகத்தில் பாஜக ஒருபோதும் வளராது. எடப்பாட்டி பழனிசாமி உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாஜகவுக்கு சகிப்புத் தன்மை இல்லை. அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது. அவருக்கு வாயடக்கம் தேவை.