பேராசிரியைகளிடம் அத்துமீறல்- விசாகா கமிட்டி வளையத்தில் சேலம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்

பேராசிரியைகளிடம் அத்துமீறல்- விசாகா கமிட்டி வளையத்தில் சேலம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்
பேராசிரியைகளிடம் அத்துமீறல்- விசாகா கமிட்டி வளையத்தில் சேலம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்

வேலைக்கு வராமலே சம்பளம் வாங்கி கொண்டு ஒருவர் இருக்கிறார்.

சேலம் டூ தாரமங்கலம் ரோட்டில் அமைந்திருக்கிறது அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவகல்லூரி. இந்த மருத்துவகல்லூரியில் நுண்ணுயிரி துறை தலைவராக இருப்பவர் ராஜேஷ். இவர் இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்கிறார், பெண் பேராசிரியர்களின் பின்னழகை பற்றி பேசுகிறார் என்று மருத்துவ துறை, காவல்துறை, முதல்வர் தனி உதவியாளர் வரையிலான மேலிடத்துக்கு அங்கு பணிபுரியும் உதவி பேராசிரியைர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த புகார் சேலம் காவல்துறைக்கு  அனுப்பபட்டது. சேலத்துக்கு ஸ்டாலின் விசிட் போன்ற காரணங்களால் விசாரணை தள்ளி போனது. இதே புகாரை சேலம் மருத்துவக்கல்லூரி டீனிடம் கொடுத்த உதவி பேராசியைகள் ' டீன் துறை தலைவருக்கு சாதகமாக நடப்பதாகவும் குற்றம்  சுமத்தினார்கள்.
அடையாளம் வேண்டாம் என்று பேசிய உதவி பேராசிரிய பெண்கள் 'எங்களை பற்றி மற்றவர்களிடம் தவறாக சித்தரிக்கிறார். தவறாக பேசுகிறார். தவறாக நடக்கிறார். பணியில் ஓவர் டார்ச்சர். மற்றவர்கள் முன்னிலையில் அதிகபடியாக திட்டுவது. மாணவர்கள் முன்னிலையில் திட்டுவது என்று டார்ச்சர் செய்கிறார். மொத்தத்தில் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கிறார். காவல்துறை விசாரித்துவிட்டு, விசாகா கமிட்டி விசாரணையும் நடக்கிறது. நீதி கிடைக்கும்.' என்றார்கள்.
இது பற்றி துறைத்தலைவர்  ராஜேஷிடம் பேசினோம். ' நான் துறை வேலை ரீதியாக நேர்மையாக நடப்பவன். லேட்டாக வருவது, பணியை சரியாக செய்யமால் இருப்பது போன்ற விசயங்களை தட்டி கேட்டேன். அதற்காக என் மேல் குற்றம் சொல்கிறார்கள். என்ன குற்றம் சொன்னால் எடுபடும் என்று தெரிந்து இப்படி குற்றம் சொல்கிறார்கள். வெளியில் விசாரித்து பாருங்கள் சார்.' என்றார்.
டீன் மணியிடம் பேச பல தடவை தொடர்புகொண்ட போதும் நம் அழைப்பை ஏற்கவில்லை. காவல்துறை வட்டாரத்தில் பேசினோம்.  'துணை கமிஷனர் லெவலில் விசாரணை நடந்து முடிந்துவிட்டது. நம்ம சைடில் விசாரித்துவிட்டோம். டீன் 8 பேர் கொண்ட விசாகா குழுவை அமைத்து இருக்கிறார். அது விசாரணை போய்கொண்டிருக்கிறது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்' என்றார்கள். 
மருத்துவகல்லூரி வட்டாரத்தில் பேசினோம். 'நுண்ணுயிரியல் துறையில் வேலைக்கு வராமலே சம்பளம் வாங்கி கொண்டு ஒருவர் இருக்கிறார். அரசியல் பலத்தோடு அவர் இருக்கிறார். அதை ராஜேஷ் தட்டி கேட்டதன் பிண்ணனிதான் இந்த புகார். அதோடு இல்லமால் கம்யூனிவல் ரீதியான பாகுபாடு அரசியல் அதிகமாக இருக்கிறது மொத்த மருத்துவகல்லூரி துறையிலும். இதனால் பலர் வேலையை விட்டு சென்று இருக்கின்றனர். குறிப்பிட்ட சமூகத்தின் டாமினேஷன் அதிகமாக இருக்கிறது. அதுதான் மொத்த பிரச்சினைக்கும் காரணம்.' என்று முடித்தார்கள்.
ஓ..,விசயம் அப்படி  போகுதா?

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com