தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால், அடுத்தடுத்து பல்வேறு தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. பலர் இந்த சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி, பணத்தை இழந்து தற்கொலை முடிவை எடுக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கிடையே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கிய நிலையில், அவசர சட்டம் கடந்த அக்.3ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.